Tuesday, September 13, 2011
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பாதூகாப்பு படையினருடனான ஒன்று கூடலொன்றினை இன்று 12.09.2011 திங்கட்கிழமை நடாத்தியது.
சம்மேளன கூட்ட மண்டபத்தில் சம்மேளன தலைவர் அல்ஹாஜ். எம்.ஐ.எம்.சுபையீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ரஹ்மானி, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் அம்பேசிரி குணவர்த்தன,மட்டக்களப்பு மாவட்ட விமானப்படை பொறுப்பதிகாரி விங் கமாண்டர் டபில்யூ.எம்.ஏ.வீ.வீவிகம, மட்டு அம்பாறை 23வது இராணுவ கட்டளை தளபதி பிரிக்கேடியர் எல்.எம்.மிடலிகே, மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியச்சகர் லால் செனவிரட்ன, பிராந்திய இராணுவ பொறுப்பதிகாரி மேஜர் எச்.ஏ.டீ.ஜீ.டீ அல்விஸ், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.டபில்யூ.என்.டீ.குணவர்த்தன உட்பட இராணுவ,பொலிஸ் உயர் அதிகாரிகளும், பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், மாகாணசபை உறுப்பினர்களான யூ.எல்.எம்.என்.முபீன், கே.எல்.எம்.பரீட், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான்(அன்சார்), நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், உறுப்பினர்களான எம்.எம்.அலிசப்ரி, எச்.எம்.எம்.பாக்கீர், எம்.ஹாறூன், ஸல்மா அமீர் ஹம்ஸா, மண்முனை பற்று பிரதேச சபை உறுப்பினர்களான எம்.முபாரக், எம்.மதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சம்மேளன உறுப்பினர் அஷ்ஷெய்க் ஏ.எல்.சபீல் நளீமி அவர்களினால் காத்தான்குடி சம்மேளனம் பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும், காத்தான்குடி மக்கள் எதிர் நோக்கும் முக்கியமான காணி பிரச்சினை மற்றும் கழிவுகள் தொடர்பாக எழுந்துள்ள கருத்துமுரண்பாடுகள். புலிகளினால் ஏற்பட்ட உயிர் சொத்து இழப்புக்கள், படைதரப்புடனான காத்தான்குடி மக்களின் உறவுகள் தொடர்பாக தெரியப்படுத்தப்பட்டதுடன் அவை தொடர்பான அறிக்கைகளும் படை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுகளின் இறுதியாக சம்மேளனத்தினால் படை அதிகாரிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பகல் போசன விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றது.

No comments:
Post a Comment