Thursday, September 8, 2011

போர்க்குற்ற அறிக்கை மனித உரிமைப் பேரவைக்குச் செல்கிறது -முடிவெடுத்தார் பான் கீ மூன்!

Thursday, September 08, 2011
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவைக்கு பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையை அனுப்புவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் சற்று நேரத்துக்கு முன்னர் கிடைத்த செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமான பான் கீ மூனினால் இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவின் அறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிப்பதா இல்லையா இல்லை என்ற நிலையிலேயே அதனை மனித உரிமைப் பேரவைக்கு அனுப்புவது எனத் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment