Friday, September 9, 2011

விஜய் - சீமான் மீண்டும் சந்திப்பு! களை கட்டப்போகும் கோபம்!!!

Friday, September 09, 2011
நடிகர் விஜய்யும், டைரக்டர் சீமானும் மீண்டும் சந்தித்து பேசியுள்ளனர். இதனால் மீண்டும் கோபம் களைகட்டும் என கூறப்படுகிறது. இதற்கு முன்பு பல முறை விஜய்யை சந்தித்து கதையை சொல்லி அவரை சம்மதிக்கவும் வைத்திருந்தார் சீமான். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு புறம் கவுதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் என்று கதை கேட்டு வந்தார் விஜய்.

கோபம், பகலவன் என்று தலைப்புகள் மாறிக் கொண்டிருந்தனவே தவிர, இந்த பட விஷயத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த சீமான், தனது தேர்தல் பிரசாரத்தில் பிஸியாகி விட்டார். தேர்தல் முடிந்து, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகும் கோபம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாததால் படம் ட்ராப் ஆகி விட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீமானை அழைத்திருக்கிறார் விஜய்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தோடு விஜய்யை சந்தித்த சீமான், சுமார் மூன்று மணி நேரம் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு எதற்காக நடந்தது? என்ன முடிவு எடுக்கப்பட்டது? என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாவிட்டாலும், மீண்டும் கோபம் களைகட்ட வாய்ப்பு இருக்கிறது என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment