Thursday, September 08, 2011டில்லி குண்டுவெடிப்பு:ஜம்மு-காஷ்மீரில் 3 பேர் கைது: என்.ஐ.ஏ. தீவிர விசாரணை:-டெல்லி குண்டுவெடிப்பு:துப்பு கொடுப்போருக்கு ரூ. 5 லட்சம் பரிசு தரப்படும்-என்ஐஏ!
டில்லி: டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஸ்ட்வார் என்ற இடத்தில் உள்ள இணையதள மையத்தின் உரிமையாளர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிருந்து இமெயில் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. டில்லியின் நேற்று காலை 10.17 மணியளவில் ஐகோர்ட் 5-வது வாசலில் சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் 12 பேர் பலியாயினர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் கீழ் 20 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறிய சூட்கேசில் வைக்கப்பட்ட குண்டு ஐகோர்ட் வாசலில் வெடித்ததாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு ஹர்கத்-அல்-ஜிகாதி பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இதனை இமெயில் மூலம் அந்த அமைப்பு தெரிவிந்திருந்தது. இதனையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணையில் இறங்கினர். முதற்கட்டமாக இமெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதை கண்டறிந்துள்ளனர். அதன்படி இந்த இமெயில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கீஸ்ட்வார் என்ற இடத்தில் உள்ள இணையதளத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த இணையதள உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது ஐகோர்ட் வாசலில் நின்றிருந்த கார் ஒன்றினையும் ஆய்வு செய்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிதம்பரம் ஆலோசனை: இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் உயர்மட்ட அவசர ஆலோசனை கூட்டம் நடக்கிறது.. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன், உள்துறை செயலர் ஆர்.கே. சிங் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், தற்போது ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தேசியபுலனாய்வு ஏஜென்சியினர் விசாரணை நிலவரம் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது
ரூ. 5 லட்சம் பரிசு: இந்த குண்டு வெடிப்பு சம்பம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கூறுகையில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகளின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களை பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்தியன் முஜாகிதீன் :இதற்கிடையே டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு ஏற்கனேவ ஹர்கத்-அல்- ஜிகாதி அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக , இமெயில் வாயிலாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தாங்கள் தான் காரணம் என இந்தியன் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இமெயில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment