Saturday, September 03, 2011
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவக்கைகள் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் ஏனைய நிறுவனங்களிடம் அறிக்கையை சமர்ப்பிப்பதா என்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழு அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுமா என ஊடகியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பான் கீ மூன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டமையை பர்ஹான் ஹக் உறுதிப்படுத்தியுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலேசானை வழங்கும் நோக்கில் தாருஸ்மான் தலைமையிலான மூவர் அடங்கிய குழு இந்த அறிக்கையை தயாரித்திருந்தது.
இந்தக் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக பதில் எதனையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment