Friday, September 2, 2011

காஷ்மீரில் “என்கவுண்டர்”: 3 பாக்.சிப்பாய்கள் சுட்டுக்கொலை!

Friday, September 02, 2011
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குப்வாரா மாவட்டம் ஹாண்ட்வாரா அருகே உள்ள வாடர்பாலாவனப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக ராணுவத்தினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவமும் துப்பாக்கியால் சுட்டன பீரங்கி தாக்குதலும் நடந்தது. 50 நிமிடம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 3 பாகிஸ்தான் சிப்பாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியானவர்கள் பெயர் விவரம் தெரியவில்லை என்று ராணுவ அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் பல தீவிரவாதிகள் வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என ராணுவத்தினர் சந்தேகிக்கிறார்கள். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் ராணுவ ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்திய ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையால் தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment