Saturday, September 03, 2011
அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையிலான தொடர்பு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என தனியார்துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் தொடர்பில் அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையிலான தொடர்பை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்ற சர்வதேச சமூகத்தின் குற்றச்ச்சாட்டுக்களுக்கு இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை என தனியார்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சமூகத்துடன் ஏற்படும் முறுகல் நிலைமைகளினால் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்கள் அதிகளவான பாதிப்பினை எதிர்நோக்க நேரிடுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை ரத்து செய்த போது சிறிய ஆடைக்கைத்தொழில் உற்பத்திசாலை உரிமையாளர்கள் மற்றும் ஏற்மதியாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா ஏதேனும் பொருளாதார கெடுபிடிகளை விதித்தால் அதன் மூலம் நாட்டு மக்களே அதிகளவில் பாதிக்கப்படுவர் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை பழையவற்றை மீட்டுவதற்கு மட்டுமே பயன்படும் என தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சமூகத்துடன் உரிய முறையில் தொடர்புகளைப் பேணாவிட்டால் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையின் நான்கு முன்னணி தனியார்துறை வர்த்தக அமைப்புக்களினால் கூட்டாக இணைந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment