Thursday, September 22, 2011

பேர்முடாவில் 76,297 அமெரிக்க டொலர்களை காப்புறுதி நிறுவனத்திடமிருந்து மோசடி செய்து பெற்றுக் கொண்ட இலங்கைப் பெண்ணுக்கு 16 மாத சிறைத் தண்டனை!

Thursday, September 22, 2011
பேர்முடாவில் 76,297 அமெரிக்க டொலர்களை காப்புறுதி நிறுவனத்திடமிருந்து மோசடி செய்து பெற்றுக் கொண்ட இலங்கைப் பெண்ணுக்கு 16 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

36 வயதான சந்திமா ஆராய்ச்சிகே என்பவரே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் அவார். இவர் தனக்கு இலங்கையில் சத்திர சிகிச்சை நடைபெற்றதாக கூறி 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2011 மே மாதம் வரை நான்கு தடவைகள் நிதி மோசடி செய்துள்ளார்.

ஆனால் இவர் நான்காம் தடவை மோசடி செய்யமுற்பட்ட போது அது நிறுவன அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

இவர் முதல் மூன்று தடவைகளில் 68,419 அமெரிக்க டொலர்கள் மோசடி செய்துள்ளார். ஆனால் இவர் நான்காவது தடவை 13,897 அமெரிக்க டொலர்களை மோசடி செய்ய முற்பட்ட போது முடியாமல் போயுள்ளது.

ஒவ்வொரு முறையும் இவர் தனக்கு இலங்கையில் சத்திரசிகிச்சை நடந்ததாககூறி பணம் பெற்றுள்ளார். ஆனால் இவர் இலங்கைக்கு வருவதே இல்லை என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை ஆகஸ்ட் 20ம் திகதி சுசந்தன் விஜயகோன் என்பவருக்கு இலங்கையில் சத்திர சிகிச்சை நடந்ததாக கூறி 7,884 அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளார்.

இவர் குறித்த நபருக்காக பெற்றுக்கொண்ட பணத்தையும் தனது வங்கி கணக்கிலேயே வைப்பிலிட்டுள்ளார்.

அதே தினத்தில் அவரது போலிக் காப்புறுதிக் கோரிக்கைகள் குறித்து காப்புறுதி நிறுவனத்துக்கு தெரியவந்தது. அதை அடுத்து அவர் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது வீட்டினை சோதனை செய்த போது கிடைத்த மெமரி கார்ட்டில் இலங்கை வைத்தியசாலையின் பற்றுசீட்டு பிரதிகள் இருந்துள்ளன.

குறித்த பற்று சீட்டில் குறிப்பிடப்பட்ட விஜயகோன் இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தமையை அடுத்தே குறித்த பெண்ணுக்கு 16 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment