Thursday, September 22, 2011புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் சொத்துக்களுக்கு என்னவாயிற்று என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான சட்டத் திருத்த விவாதத்தில் கலந்து கொண்டு பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
19 கப்பல்களும், 4200 மில்லியன் ரூபா சொத்துக்களும் குமரன் பத்மநாதனிடம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சொத்துக்களுக்கு என்ன நடந்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குமரன் பத்மநாதன் ஹெலிகொப்டரில் நாட்டை வலம் வரும் அதேவேளை, யுத்த வெற்றிக்கு வழிகோலிய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறைச் கூண்டில் வாடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment