Thursday, September 22, 2011

புலிகளினால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Thursday, September 22, 2011
புலிகளினால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் நேற்று பாரராளுமன்றில் புதிய சட்டங்களை நிறைவேற்றியது.

பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களைத் தடுத்தல் மற்றும் சட்டவிரோத நிதிக் கொடுக்கல் வாங்கல்களைத் தடுத்தல் ஆகியவற்றுக்காக புதிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டள்ளன.

ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளுக்கு அமைவான முறையில் இந்த சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா மற்றும் உலகின் ஏனைய பாகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி திரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் எவரேனும் சட்டவிரோத நிதிக் கொடுக்கல் வாங்கல், பயங்கரவாத நிதி கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புபட்டிருந்தால் புதிய சட்டங்களின் மூலம் தண்டனை விதிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத் திருத்தங்களின் மூலம் நீதிமன்ற உத்தரவு இன்றியே காவல்துறையினர் சந்தேக நபர்களின் சொத்துக்களை முடக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

கறுப்புப் பணத்தை பதுக்க முயற்சி மேற்கொள்வோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment