Thursday,September, 29, 2011கொழும்பு:செனல் 4 தயாரித்த இலங்கையின் கொலைக்களங்கள் காணொளியை ஒளிபரப்ப நோர்வேயின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் எடுத்த முடிவை இலங்கை ஆட்சேபித்துள்ளது.இலங்கையின் தூதுவர் ரொட்னி எம் பெரேரா இந்த ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் டிவி என்ஆர்கே நிறுவனத்துக்கு தூதுவர் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக புனையப்பட்ட அடிப்படையற்ற காணொளியாகவே செனல் 4வின் இலங்கையின் கொலைக்களங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்;டுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தநிலையில் இவ்வாறான காணொளிகள் அந்த முனைப்புகளில் பாதிப்புக்களை கொண்டு வந்து விடும் என்றும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை செனல் 4 காணொளியை ஒளிபரப்புவதன் மூலம் நோர்வேயில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மற்றும் நோர்வேயில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பு குறித்து பிரச்சினை எழுந்துள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் செனல் 4 காணொளிக்கு பதிலாக இலங்கை அரசாங்கம் தயாரித்துள்ள Lies Agreed Upon என்ற காணொளியையும் டிவி என்ஆர்கே ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment