Thursday,September, 29, 2011கொழும்பு:சட்ட விரோதமாக சேவையிலிருந்து விலகியுள்ள 60 ஆயிரம் இராணுவ வீரர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மீண்டும் பொது மன்னிப்புக்கான கால அவகாசம் வழங்குவது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆரச்சி தெரிவித்தார்.
இந்த இராணுவ வீரர்களை கைது செய்த பின்னர், சட்டப்படி இராணுவ சேவையிலிருந்து அவர்களை விலக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை சட்டவிரோதமாக சேவையிலிருந்து விலகிச்சென்ற 11 ஆயிரம் இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment