Saturday, September 3, 2011

சனல்4 ஊடகத்திற்கு பதிலளிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஐ.நா திரையிடப்படவுள்ளது?.

Saturday, September 03, 2011
பிரித்தானியாவின் சனல் ஊடகத்தினால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்திற்கு பதிலளிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணப்படம் ஐக்கிய நாடுகள் அமர்வுகளில் திரையிடப்பட உள்ளாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் கேள்விப் பதில் நேரத்தில் குறித்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகளுக்கான வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணே மற்றும் பிரதிப் பிரதிநிதி சவேந்திர சில்வா ஆகியோர் இந்த ஆவணப்படம் தொடர்பில் விளக்கமளிப்பார்கள்.
எதிர்வரும் 6ம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் ஹமார்ஸ்க்ஜோல்ட் அரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படம் பொய்யானது என தெரிவிக்கும் நோக்கில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சினால் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment