Saturday, September 3, 2011

வடக்கில் அமைந்துள்ள எந்த இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது - பாதுகாப்புத் தரப்பு

Saturday, September 03, 2011
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கில் அமைந்துள்ள எந்த இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே பாதுகாப்பு தரப்பின் அதிகாரி ஒருவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த கோரிக்கை குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment