Saturday, September 3, 2011

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு 42 நாட்களுக்குள் தீர்வு!

Saturday, September 03, 2011
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை ஆறு வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவரும் புதிய செயற்றிட்டமொன்றை ஆரம்பிக்க சட்மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொலிஸ் மற்றும் நீதியமைச்சுடன் இணைந்து இந்த செயற்றிட்டத்தை செயற்படுத்தவுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ குறிப்பிடுகிறார்.

தற்போது சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தாமதமடைவதாகவும், இதனால் பாதிக்கப்படும் சிறுவர்கள் பாரிய மன உலைச்சலுக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசாரணைகளை துரிதப்படுத்தும் புதிய செயற்றிடடம் பரீ்ட்சார்த்தமாக ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படும் சிறுவர் தினத்தையொட்டி பொலன்னறுவை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக பொலிஸார், நீதவான்கள் மற்றும் வைத்திய அதிகாரிகளை தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று எதிர்வரும் ஆறாம் திகதி நடைபெறவுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ குறிப்பிடுகிறார்.

இந்த திட்டத்தின் கீழ் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை குறித்த அதிகாரி ஒரு வாரத்திற்குள் நிறைவுசெய்து சிறுவர் பாதுகாப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு குறித்த நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிப்பதற்கு நீதவான் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment