

Tuesday, September 06, 2011வேலூர்:ராஜிவ் கொலையாளிகள் 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி வேலூரில் இருந்து நடைபயணம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கைது!
அவருடன் அவரது கட்சியினர் 230 பேரும் கைது செய்யப்பட்டனர்.
3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்காக முதல்வரை பாராட்டியும் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் வேலூரில் இருந்து சென்னைக்கு நடைபயணம் மேற்கொள்வார்கள் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசாரும் அனுமதி அளித்திருந்தனர். அதன்படி அவர்கள் வேலூரில் இன்று நடைபயணம் தொடங்கினர்.
எனினும் நடைபயணத்தின்போது போலீசார் விதித்த நிபந்தனைகளை மீறி அவர்கள் நடந்துகொண்டதால் வேலூர் சத்துவாச்சேரி அருகே அவர்களை போலீசார் கைது செய்தனர்.
(சீமான் கைது திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளார்)
No comments:
Post a Comment