Friday, September 16, 2011

பாகிஸ்தானில் இறுதி சடங்கில் மனித குண்டு தாக்குதல்; 31 பேர் பலி!

Friday, September 16, 2011
பாகிஸ்தானில் ஆப்கா னிஸ்தான் எல்லையையொட்டி மலைபகுதியில் உள்ள லோவர்டிர் மாவட்டத்தில் ஜந்தால் நகரம் உள்ளது. அங்கு பகத்கான் என்ற தச்சு தொழிலாளி சாலை விபத்தில் பலியானார். அவரது இறுதி சடங்கு நடந்தது. அதில் 200 பேர் கலந்து கொண்டனர். அப்போது மக்கள் கூட்டத்துக்குள் தற்கொலை தீவிரவாதி ஊடுருவினான். தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான்.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 31 பேர் பலியானார்கள். 63 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே சாவு எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

இறந்த தச்சு தொழிலாளி பகத்கான் மாஷ்வானி என்ற மலைவாழ் இனமக்கள் அமைப்பின் உறுப்பினர். இது தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரானது. எனவே இவரது இறுதி சடங்கின் போது தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தே கிக்கப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கு இது வரை யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இதற்கிடையே, பாகிஸ்தானில் இயங்கும் அல்கொய்தா தீவிரவாதி களின் தலைவர் இபு ஹாப்ஸ் அல்-ஷாக்ரி, அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

கடந்த மாதம் வசிரிஸ்தானில் ஆளில்லா விமானம் மூலம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அல்கொய்தாவின் 2-ம் கட்ட தலைவர் அதிபர் அப்துல்-ரஹ்மான் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அவருடன் சேர்ந்து அல்-ஷாக்ரியும் பலியானதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை பாகிஸ்தான் அல்கொய்தா தீவிரவாதிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். 1 1

No comments:

Post a Comment