Saturday, September 24, 2011

மட்டக்களப்புக்கு இவ்வாண்டு 31.27 மில்லியன்: ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடு!

Saturday, September 24, 2011
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவ்வாண்டு 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் 31.27 மில்லியன் ரூபாவினை தமது பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடுசெய்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்பரன் ஆகிய மூவரும் தலா ஐந்து மில்லியன் ரூபாய்களையும், பிரதியமைச்சர்கள் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் பசீர் சேகுதாவூத் ஆகியோர் தலா ஐந்து மில்லியன் ரூபாய்களையும், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஐந்து மில்லியன் ரூபாவினையும் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இதே போன்று தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸ்ஸநாயக்க எட்டு இலட்சத்தி எழுபத்தையாயிரம் ரூபாவும், ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் 3 இலட்சம் ரூபாவினையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஐம்பதாயிரம் ருபாவினையும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிதி யொதுக்கீடு செய்துள்ளனர்.

412 திட்டங்களுக்காக இந்த 31.27 மில்லியன் ரூபா ஒதுக்கீடு பயன்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment