Saturday, September 24, 2011லண்டனில் பாலியல் புரிந்த தேரோவுக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
பாலியல் குற்றம் சாட்டப்பட்ட லண்டனில் குரைடனில் உள்ள தேம்ஸ் பௌத்த விகாரையின் பிரதம தேரரான பஹலம சோமரட்ன பிரித்தானிய நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் செய்யப்பட்டதனையடுத்து எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஒரு சிறுமி மீது பாலியல் வல்லுறவினையும், மேலும் மூன்று பாலியல் ரீதியான சில்மிஸங்களையும் லண்டனில் செல்வந்தர்கள் வாழும் புறநகர் பகுதியான சிஸ்விக் பகுதியில், 1977 ஆம் ஆண்டுக்கும் 1978 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் புரிந்திருந்தார் என இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த இவர், இன்று நீதிமன்றில் மீண்டும் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment