Saturday, September 24, 2011

காத்தான்குடியில் கழிவு நீர் அகற்றல் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ சுகாதார திட்டம்!

Saturday, September 24, 2011
காத்தான்குடி நகர சபை பிரிவில் ஆறு கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட கழிவு நீர் அகற்றல் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ சுகாதார திட்டம் (23.9.2011) திறந்து வைக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமான யு.என்.டி.பி.யினால் கொக்கா கோலா நிறுவனத்தின் நிதியுதவியுடன் காத்தான்குடி நகர சபையினால் காத்தான்குடி நகர சபை


பிரிவிலுள்ள காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஆற்றங்கரையை அண்டியுள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கழிவு நீர் அகற்றல் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத் திட்டம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்ளஸ் கே., கொக்கா கோலா நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலை தீவுக்கான முகாமையாளர் அவிசேக் ஜுக்றான், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான யு.எல்.எம்.என்.முபீன், கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஷ்பர், உட்பட நகர சபை உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அதிகாரிகள் கொக்க கோலா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் பிரமுகர்கள் முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்ததுடன் இதன் நினைவுக்கல்லையும் அதிதிகள் திரை நீக்கம் செய்துவைத்தனர்.

இப்பிரதேசத்தில் கடற்கரையை அண்டிய பகுதியில் சிறுவர் பூங்காவும் இதன் போது திறந்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் இப்பிரதேசத்திலுள்ள 350 குடும்பங்கள் நன்மையடவுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் இங்குள்ள வீடுகளிலுள்ள மல சல கூடங்களிலிருந்து கழிவு நீர் அகற்றப்பட்டு கழிவு நீர் முகாமைத்துவம் மேற்கொள்ளப்படுவதுடன் இதன் மூலம் சுகாதார திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தற்போதய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் காத்தான்குடி நகர சபை தலைவராக இருந்தபோது இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment