Thursday,September 15,2011
ஜோகன்னஸ்பர்க்: அங்கோலாவில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதில் 30 பேர் உடல்கருகி இறந்தனர். அங்கோலா விமான படையை சேர்ந்த வீரர்கள் 36 பேர், விமானத்தில் நேற்று ஹூவாம்போ விமான நிலையத்துக்கு புறப்பட்டனர். விமானம் தரையிறங்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் 30 பேர் பலியானதாக அங்கோலா ரேடியா நேற்று செய்தி வெளியிட்டது.
தகவல் அறிந்து தலைநகர் லுவான்டாவில் இருந்து மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பிரேசில் சாபாலோ நகரில் சில நாட்களுக்கு முன் நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகி இறுதி போட்டியில் அங்கோலாவை சேர்ந்த லெய்லா லோப்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment