Monday, September 26, 20112ம் இணைப்பு-வீரவில வெடிப்பு சம்பவத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் காயம்!
வீரவில இராணுவ முகாமில் தோட்டாக்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த களஞ்சியசாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
குறித்த ஆயுத களஞ்சியசாலையில் தொடர்ந்தும் தீ பற்றுவதாக அவர் தெரிவித்தார்.
வீரவில இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் இன்று மாலை நான்கு மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராய்ச்சி தெரிவித்தார்.
No comments:
Post a Comment