Monday, September 26, 2011

பான் கீ மூன் விமர்சனங்கள் வெளியிட்டுள்ளமை தொடர்பில்-ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் தமரா குணநாயகம் அதிருப்தி!

Monday, September 26, 2011
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலின் 26வது கூட்டத்தொடருக்கு ஐநா நிபுணர் குழு அறிக்கையை அனுப்பி வைத்தமை மற்றும் இலங்கையின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் பான் கீ மூன் விமர்சனங்கள் வெளியிட்டுள்ளமை தொடர்பில் ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் தமரா குணநாயகம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் முன்பே அதன் நம்பகத்தன்மை குறித்து ஜநா செயலாளர் நாயகம் கருத்து வெளியிட்டுள்ளமையை அவர் கண்டித்துள்ளார்.

மேலும் நிபுணர் குழு அறிக்கையை மனித உரிமை கவுன்ஸிலுக்கு அனுப்பி வைத்தமை பான் கீ மூனின் பொருத்தமற்ற ஒழுக்கமற்ற செயல் என தமரா குணநாயகம் விமர்சித்துள்ளார்.

மனித உரிமை கவுன்ஸிலில் பாரதூரமான முடிவுகள் எடுக்கப்பட்டால் அது எதிர்காலத்திற்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என சர்வதேச நாடுகளின் தூதுவர்களிடம் தான் விளக்கமளித்துள்ளதாக தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment