Thursday, September 08, 2011
இலங்கை: 24 மணித்தியாலமும் சேவையை வழங்கக்கூடிய இடைக்கால அலுவலகமொன்றை நடத்துவதற்குரிய செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம் குறிப்பிடுகிறது.
இந்த திட்டத்தை முதலில் கொழும்பில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் சரத் அபேகுணவர்தன குறிப்பிடுகிறார்.
குறிப்பாக கடமை நேரங்களில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
குறிப்பாக மேல் மாகாணத்தை இலக்காக கொண்டு 24 மணிநேரமும் செயற்படும் வகையில் பம்பலபிட்டி அலுவலகத்தை தளமாகக் கொண்டு இந்த இடைக்கால அலுவலகம் ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வார இறுதி நாட்களிலும் அதேபோன்று இரவு நேரங்களிலும் மேல்மாகாணத்திலுள்ள பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சம்பவங்களின் போது நன்னடத்தை அலுவலக அதிகாரிகளை தொடர்புகொள்வது முக்கிய அம்சமாகும்.
சில சமயங்களின்போது அதிகாரிகளை வார இறுதி நாட்களிலும் இரவு நேரங்களிலும் தொடர்பு கொள்ள முடியாமல் போகின்றமையால் இந்த அலுவலகத்தை 24 மணிநேரமும் இயங்க வைத்து அதிகாரிகளை தொடர்பு கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஏனைய பிரதேசங்களிலும் அலுவலகங்களை ஸ்தாபிக்க திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment