Thursday, September 8, 2011

பாராளுமன்றம் அரைமணிநேரம் ஒத்திவைப்பு

Thursday, September 08, 2011
இலங்கை:குற்றவியல் சட்ட கோவையில் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழுன்ன விதிமுறை இன்று பாராளுமன்றத்தில் விவாதாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாராளுமன்றத்தில் இன்று அமைதியின்மை ஏறற்பட்டுள்ளது.

இதனையடுத்து சபை நடவடிக்கைகளை அரை மணித்தியாலத்திற்கு ஒத்திவைக்க பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி நடவடிக்கை எடுத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சட்டம் முழுமையாக சட்ட விரோதமான ஒன்றாகும் என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா நோன் அமரதுங்க தெரிவித்துடனக் இது தொடர்பான விவாதத்தை இன்றைய தினம் சபையில் நடத்த முடியாது எனவும் அவர் கூறினார்.

இதனையடுத்து குறுக்கிட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ செல்லுபடியற்ற சட்டமொன்றை எவ்வாறு அங்கிகரிக்க முடியும் என்று வினவயதுடன் இது தொடர்பான போலி வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் சபையில் சமர்ப்பித்துள்ளதாகவும் குற்றஞசாட்டினார்.

இதற்குப் பதிலளித்த நிதி அமைச்சர் ரவூப் ஹகிம் இதுவொரு போலி வர்த்தமானி அறிவித்தல் அல்லவென வாதிட்டதுடன் அதனை பாராளுமன்றத்தில் வுவாதத்திற்கு எடுத்துக்கொள்வதில் எவ்வித இடையூறும் ஏற்படப் போவதில்லை என்றும் கூறினார்

No comments:

Post a Comment