Tuesday, September 27, 2011

பேருந்துடன் லொறி மோதியதில் 18 பேர் காயம்!

Tuesday, September 27, 2011
அனுராதபுரம் - யாழ்ப்பாணம் வீதியின் ராமகலே பகுதியில் பேருந்துடன் லொறியொன்று மோதியதில் சுமார் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த லொறியும், கலேன்பிதுனுவெவவில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த பேருந்துமே ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.

No comments:

Post a Comment