Tuesday, September 27, 2011

குமரகுருபரன் - இரா சம்பந்தன் சந்திப்பு!

Tuesday, September 27, 2011
ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி. நல்லையா குமரகுருபரன் இன்று (செப்டம்பர் 27, 2011) காலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் சமகாலத்தில் தமிழர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் மற்றும் எதிர்வரும் கொழும்பு மாநகரசபை மற்றும் தெகிவளை-கல்கிஸ்ஸை மாநகர சபைகளுக்கான தேர்தல்கள் பற்றியும் கலந்துரையாடினர்.

No comments:

Post a Comment