Saturday, September 24, 2011டெல்லி: தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும், தேர்தல் முடிவுகளை எடுக்கவும் 13 பேர் கொண்ட மெகா குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது. இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக தங்கபாலு செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி இதுதொடர்பாக ஒரு பட்டியலை சோனியா காந்திக்கு அனுப்பியிருந்தது. தமிழக காங்கிரஸ் கட்சியின் பல்வேறு கோஷ்டிகளின் தலைவர்கள் பெயர்கள் அதில் இடம் பெற்றிருந்தது. அதைப் பரிசீலித்த சோனியா தற்போது இந்தப் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்துள்ளாராம். இதை கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்துள்ளார்.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளோர் விவரம்:
ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், ஈவிகேஎஸ் இளங்கோவன், எம்.கிருஷ்ணசாமி, குமரி அனந்தன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், யசோதா, ஜே.என்.ஆரூண் ரஷித், பீட்டர் அல்போன்ஸ், யுவராஜ் மற்றும் கே.கோபிநாத்.
இந்தக் குழு கூடி வேட்பாளர்களைத் தேர்வு செய்து அறிவிக்கும். அதன் பின்னர் அவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வார்கள். அதன் பின்னர் அவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். பிரசாரத்திற்கு டெல்லியிலிருந்து யாரேனும் வருவார்களா என்பது தெரியவில்லை. அனேகமாக உள்ளூர் தலைவர்களை வைத்தே பிரசாரத்தை முடித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment