Tuesday, September 6, 2011

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் 1200 பேர் 30ம் திகதியன்று விடுவிப்பு!

Tuesday, September 06, 2011
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் 1200 பேர் 30ம் திகதியன்று விடுவிப்பு!

புனர்வாழ்வு செய்யப்பட்ட மேலும் 1200 புலி உறுப்பினர்கள் இம்மாதம் 30ம் திகதி சமூகமயப்படுத்தப்பட உள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் எஸ். திசாநாயக்க தெரிவித்தார்.

இம்மாதம் 19ம் திகதி வவுனியாவில் சமுகமயப்படுத்தப்படவுள்ள 500 புலி உறுப்பினர்களுடன் இந்த மாதத்தில் சமூகமயப்படுத்தப்பட உள்ள முன்னாள் புலி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 1700 ஆகுமென அவர் மேலும் கூறினார்.

புனர்வாழ்வு முகாம்களில் 11,696 பேர் புனர்வாழ்வளிப்பதற்காக தடுத்து வைத்திருந்ததாகவும், அவர்களில் தற்போது 8240 பேர் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய எஸ். திசாநாயக்க, இம்மாதத்தில் மேலும் 1700 பேர் சமூகமயப்படுத்தப்பட்டதன் பின்னர் 756 பேர் மாத்திரமே புனர்வாழ்வு முகாம்களில் மீதமாகக் காணப்படுவதாகவும் வலியுறுத்தினார். அந்த 756 பேரையும் மிக விரைவாக சமூகமயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment