Tuesday, September 6, 2011

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை மாநாட்டு கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக விவாதங்கள் முன்னெடுக்கப்படு மானால் தகுந்த பதிலளிக்க அரசாங்கம் தயார்- நிமல் சிறிபால டி சில்வா!

Tuesday, September 06, 2011
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை மாநாட்டு கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக விவாதங்கள் முன்னெடுக்கப்படு மானால் அதற்குத் தகுந்த பதிலளிக்க அரசாங்கம் தயார் நிலையில் இருப்பதாக சபை முதல்வரும் சிரேஷ்ட அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகவே அரசாங்கத் தூதுக்குழு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கான முன் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் 12 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள தொடரில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விவாதிக்க ப்படவுள்ளதாக ஐ. நா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து வினவிய போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, மேற்படி மனித உரிமை மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கையின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் இராஜதந்திரிகள், சர்வதேச நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும் சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், மேற்படி கூட்டத்தொட ரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கு இல ங்கை அரசாங்கத் தரப்பிலிருந்து செல்லும் தூதுக் குழு தயாராகவே உள்ளதாக அமைச் சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இதே வேளை, கொழும்பில் நடைபெற்ற சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெற்றதாக இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் நாடுகள் அதன் உண்மை நிலையை அறிந்து கொள்ளத் தவறிவிட்ட தாகக் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடு கள் இம்முறை ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை குற்றச்சாட்டுகளை முன் வைக்கத் தீர்மானித்துள்ள நிலையில் கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் வெளிநாட்டு ராஜதந்திரிகளை கொழும்பில் சந்தித்து விசேட கலந்துரையாடலை ஆற்றினார்.

இதன் போது இலங்கை அரசாங்கம் மனித உரிமையைப் பாதுகாப்பதில் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் யுத்தத்திற்கு பின்னரான மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, நிவாரண நடவடிக்கைகளில் அரசாங்கம் காட்டி வரும் அக்கறை குறித்தும் அவர்களுக்குத் தெளிவு படுத்தினார்.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இரண்டரை வருட குறுகிய காலகட்டத்தில் அனைத்து விட யங்களிலும் தீர்வு காணப்பட வேண்டும் என சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பது முறையல்ல என்பதை இதன் போது ராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்த அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், இதே போன்ற நிலைமைக ளைச் சந்தித்த வேறு பல நாடுகள் அங் குள்ள பிரதான விடயங்கள் தொடர்பில் இறுதித் தீர்வுகளை ஈட்டுவதற்கு பல வரு டங்கள் சென்றதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க உட்பட அமைச்சர்கள், இராஜதந்திரிகள் பலரும் கலந்து கொள்ள வுள்ளனர். இக்குழுவினர் நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்படும் போலிக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலளிப்பதில் முக்கிய கவனம் செலுத்துவர் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

No comments:

Post a Comment