Wednesday, September 07, 2011வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உந்துசக்தியாக அமையும் வகையில், தனது 11 கிளைகளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரதேச அபிவிருத்தி வங்கி திறந்துள்ளதாக வங்கியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கஷ்ட பிரதேச விவசாயிகள் மற்றும் கைத்தொழிலாளர்களுக்கு வங்கி நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் கடந்த வருடம் இவ் வங்கி ஆரம்பிக்ப்பட்டது. ரஜரட, ருஹுணு, வயப, ஊவா, கதுரட மற்றும் சப்ரகமுவ ஆகிய பிரதேசங்களில் இது திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அடுத்த வருடத்தினுள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேலும் 10 வங்கிக் கிளைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது
பிரதேச அபிவிருத்தி வங்கியானது அரச உடமையான அனுமதி பெற்ற சிறப்புத் தேர்ச்சி பெற்ற வங்கியாகும், இது தற்போது நாடுபூராகவும் 250 கிளைகளை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment