Friday, August 26, 2011

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடருமா? விஜயகாந்த் பதில்:Ôஇலங்கை தமிழர் பிரச்னைக்காக எனது பிறந்தநாளை 1990ம் ஆண்டு முதல் கொண்டாடுவதில்லை என முடிவெடுத்தேன் ஆனால் 2005ல் கட்சி ஆரம்பித்த பின்னர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறேன்-விஜயகாந்த்!

Friday, August 26, 2011
சென்னை : சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வழங்கினார்.
இன்று விஜயகாந்த் பிறந்தநாள். இதையொட்டி, தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் உள்ள முதியோர் இல்லங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.32 லட¢சம் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் 55 பேருக்கு வீட்டுமனையும், சென்னை ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.25,000 வழங்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட தென் சென்னை மாவட்ட தேமுதிக 138வது வட்ட செயலாளர் அரிகிருஷ்ணனின் குடும்பத்துக்கு ஸீ1.25 லட்சம் வழங்கப்பட்டது.

சட்டசபை தேர்தலின்போது ஆரணி தொகுதியில் பணியாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் நாராயணசாமி, விபத்தில் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.25,000 மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.3 கோடியே 14 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான இந்த நலத்திட்ட உதவிகளை கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில் Ôஇலங்கை தமிழர் பிரச்னைக்காக எனது பிறந்தநாளை 1990ம் ஆண்டு முதல் கொண்டாடுவதில்லை என முடிவெடுத்தேன். ஆனால், 2005ல் கட்சி ஆரம்பித்த பின்னர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறேன். ஆயிரக்கணக்கில் ஆரம்பித்து இன்று கோடிக்கணக்கில் வழங்குகிறோம். நான் சொத்து சேர்க்க நினைக்கவில்லை. நான் எம்ஜிஆர் ரசிகன். அதனால் எம்ஜிஆரின் காது கேளாதோர் பள்ளிக்கு வருடம்தோறும் உதவித்தொகை வழங்குகிறேன்Õ என்றார்.
இதை தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு விஜயகாந்த் அளித்த பதில்:

விருகம்பாக்கம் தொகுதியை போல¢ மற்ற தொகுதிகளுக்கும் ஆம்புலன்ஸ் வழங்கப்படுமா?
படிப்படியாக வழங்க முயற்சி செய்வேன்.
அரசு 100 நாள் சாதனை பற்றி?
ஒவ்வொரு திட்டமும் நிறைவேறட்டும். பதில் சொல்கிறேன்.நேரம் கொடுங்கள்.

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடருமா?
தேர்தல் வரட்டும். அப்போது சொல்கிறேன். இப்போது எதுவும் கூற இயலாது.
அன்னா ஹசாரே போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா?
அகிம்சைதான் சிறந்தது. இருந்தாலும் போராட்டம், ஒவ்வொருவரது மனநிலையை பொறுத்தது.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

No comments:

Post a Comment