Thursday, August 25, 2011

தமிழகத்தில் புழக்கத்தில் விடுவதற்காக பாகிஸ்தானில் கள்ளநோட்டு அச்சடிப்பு!

Thursday, August 25, 2011
சென்னை : தமிழகத்தில் புழக்கத்தில் விட கள்ளநோட்டுக்கள் பாகிஸ்தானில் தயாரித்த வருவதாக கைதான மேற்கு வங்க வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெரியமேடு ஈவேரா சாலையில் நேற்று முன்தினம் இரவு பெரியமேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் சற்று தூரத்திலேயே பைக்கை திருப்பி வேறு பாதையில் ஓட முயன்றனர்.

போலீசார் இதனை கண்டதும் ஓடிச்சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், பையில் ரூ.500 கள்ளநோட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே 2 பேரிடமும் தொடர்ந்து நடத்திய விசாரணையில், தஞ்சாவூரை சேர்ந்த சரவணன் (23), சென்னை மண்ணடியை சேர்ந்த முகமுது பரூக்(26) என்பது தெரிந்தது. “எங்களது கூட்டாளிகள் ஈவேரா சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருக்கிறார்கள்’’ என்று அவர்கள் தகவல் கொடுத்தனர்.

உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, பெரியமேடு இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் ஒரு அறையில் கள்ள நோட்டு கும்பலான மேற்கு வங்காளத்தை சேர்ந்த மசூத் ஷேக்(20), தஞ்சாவூரை சேர்ந்த ஷாஜகான் (42), ஊரப்பாக்கத்தை சேர்ந்த ரமணன் (33) ஆகியோர் பிடிபட்டனர். பையில் இருந்த க்ஷீ 5 லட்சத்து 80 ஆயிரம் கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மேற்கு வங்காளம் மசூத் ஷேக்தான் கள்ளநோட்டுக்களை சென்னைக்கு கொண்டு வந்துள்ளான். அவனிடம் மற்றவர்கள் நல்ல ரூபாய் நோட்டுக்களை கொடுத்த கள்ளநோட்டுக்களை பெற்றுக்கொள்வார்கள். பின்னர் அதனை தங்களது ஆட்கள் மூலம் தமிழகத்தில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடுவார்கள் என்பது விசாரணையில் தெரிந்துள்ளது.

மசூத் ஷேக்குக்கு தமிழ் பேச தெரியாது. அதனால் இந்தி தெரிந்த போலீஸ் மூலம் அவனிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அவர் அளித்துள்ள வாக்குமூலம்: எனக்கு சொந்த ஊர் மேற்கு வங்காளம் மால்டா மாவட்டம். பாகிஸ்தானில் அச்சடித்த கள்ள நோட்டு டன் வங்கதேசம் வழியாக எங்கள் மாவட்டத்திற்கு ஒருவர் வந்தார். என்னிடம் இந்த கள்ளநோட்டுக்களை கொடுத்தார்.

சென்னைக்கு போய் அவர் கூறிய நபர்களிடம் கள்ளநோட்டுக்களை கொடுத்து நல்ல நோட்டுக்களை வாங்கி வரும்படி தெரிவித்தார். அதற்கு கமிஷன் தருவதாகவும் சொன்னார். அதனால் சென்னைக்கு வந்தேன். ஆனால் போலீசார் வசமாக பிடித்து விட்டனர்“ என்று வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது. கைது செய்யப்பட்ட 5 பேரையும் நேற்று போலீசார் எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

போலியா... அசலா? வித்தியாசம் தெரியவில்லை

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கைது செய்யப்பட்ட மசூத் ஷேக் அடிக்கடி சென்னைக்கு ரயில் மூலம் வந்து சென்றுள்ளார். இங்கு வரும்போது எல்லாம் மற்ற 4 பேருக்கு கட்டுக்கட்டுக்காக கள்ள நோட்டுக்களை கொடுத்துள்ளதாக தெரிகிறது. அந்த கள்ள நோட்டுக்கள் எங்கு இருக்கின்றன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மசூத் ஷேக் கொண்டு வந்த கள்ளநோட்டுக்கும் நல்ல நோட்டுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

நன்றாக உன்னிப்பாக கவனித்து பார்த்தால்தான் கண்டுபிடிக்க முடிகிறது. மேலும் அவனிடம் இருந்து நல்ல நோட்டான ரூ.98 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து விட்டோம். கள்ள நோட்டு புழக்கத்தில் விட புரோக்கர்களாக சிலர் செயல்படுவதாக தெரிகிறது. அவர்களையும் சீக்கிரம் பிடித்து விடுவோம். வாகன சோதனையை தீவிரப்படுத்தியதால் இந்த குற்றவாளிகளை பிடித்து விட்டோம். மேலும் அது தீவிரப்படுத்தப்படும்’’ என்றார்.

No comments:

Post a Comment