Thursday, August 25, 2011

யாழ் இரத்த வங்கிக்கு விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் படையினரால் இரத்ததாணம்!

Thursday, August 25, 2011
பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, பருத்தித்துறையில் சேவையாற்றும் படையினர், யாழ் வைத்தியசாலையில் சிகிச்சைக்குள்ளாகியிருக்கும் நோயாளிகளுக்கு இரத்ததாணம் செய்ய முன்வந்தனர்.

பருத்தித்துறை விளையாட்டு கழக மைதானத்தில் இவ் இரத்த்தாண நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்ட அதேவேளை, இவ் ஏற்பாட்டாளர்கள் இராணுவத்தினரை அவர்களது முகாகம்களுக்கு அருகாமையில் இம் மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதற்கமைவாக படையினர் பலர் மிகவும் ஆவர்வத்துடன் இதில் பங்கேற்றிருந்தனர்.

மேலும் யாழ் பாதுகாப்புப்படை தலைமையகத்தைச் சேர்ந்த படையினரால், யாழ் போதனா வைத்தியசாலைக்கு தேவை ஏற்படும் நேரங்களில் இரத்ததாண செயற்பாடொன்றை ஏற்பாடுசெய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment