Monday, August 22, 2011

இந்தியாவிற்கு விஜயம் செய்வதில் பிரச்சினையில்லை:-தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை:(புலி)சீமான் வெளியிட்ட அறிக்கைக்கு மறுப்பு- டக்ளஸ் தேவானந்தா!

Monday, August 22, 2011
இந்தியாவிற்கு விஜயம் செய்வதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழக மற்றும் மத்திய அரசாங்கங்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சென்னை உயர் நீதிமன்றில் ஆஜராகத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜனநயாக வழிமுறைகளுக்கு திரும்பிய அனைத்து போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா படுகொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விவகாரத்தில் மத்திய அரசாங்கம் உரிய சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை என இந்திய காவல்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனினும், அமைச்சர் டக்ளஸ் எந்த நேரத்திலும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய முடியும் எனவும், அதற்கு தடையில்லை எனவும் அமைச்சரின் தமிழக சட்டத்தரணி ராஜன் என்பவர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட ரீதியிலும், உத்தியோகபூர்வமாகவும் தமிழகத்திற்கு பல தடவைகள் விஜயம் செய்துள்ளதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமக்கு எதிரான பிடிவிராந்து எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை:(புலி)சீமான் வெளியிட்ட அறிக்கைக்கு மறுப்பு- டக்ளஸ் தேவானந்தா!
தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் (புலி)சீமான் வெளியிட்ட அறிக்கைக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், இலங்கையில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தத்தின் தூண்டுதலின் பேரிலேயே நடத்தப்பட்டுள்ளது என நேற்று சீமான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அந்ந அறிக்கையில் சீமான் தெரிவித்திருந்ததாவது:

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்து மீன்பிடிப்பது இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது என்ற இலங்கை அரசின் சூழ்ச்சித் திட்டத்திற்கு உதவ, தனது ஆட்களை அனுப்பி தமிழக மீனவர்களைத் தாக்கியுள்ளார் என்பதே உண்மை.

இலங்கை தமிழர் பிரச்சினைகளில் தமிழக முதல்வர், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை கடுமையாக விமர்சித்த இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, இலங்கை மீனவர்கள்தான் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றனர். அவர்களை ஜெயலலிதா முதலில் தடுத்து நிறுத்தட்டும் என்று கூறினார்.

அதனை மெய்ப்பிக்கவே இப்படியொரு தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. எனவே தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு, அந்த குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த தமிழக முதல்வர் முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை தாம் முற்றிலும் மறுப்பதாகவும், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment