Monday, August 22, 2011

புத்தளத்தில் பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் காவல்துறை உத்தியோகத்தர் பலி!

Monday, August 22, 2011
புத்தளம் பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலை நடத்திய பொதுமக்களை கைது செய்வது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கிறிஸ் பேய் சர்ச்சை காரணமாக காவல்துறையினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் சம்பவத்தில் 23 வயதான காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் நடத்திய தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சதொச கடைத்தொகுதிக்கு எதிரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.

புத்தளம் மோட்டார் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதல்களில் ஐந்து பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூன்று பேர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையிலிருந்து குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்று வரும் அனைவரும் ஆபத்தான நிலையை கடந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

புத்தளத்தில் பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் காவல்துறை உத்தியோகத்தர் பலி:
புத்தளத்தில் பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கிறிஸ் பேய் சர்ச்சை காரணமாக காவல்துறையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

கிராம மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பட்டம் நடத்தியதனால் பதற்ற நிலைமை நிலவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிறிஸ் பேய் எனக்கருதி காவல்துறை உத்தியோகத்தர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவரும், 13 வயது சிறுமி ஒருவரும் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆத்திரமுற்ற பொதுமக்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment