Monday, August 22, 2011

கிழக்கு மாகாணத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன!

Monday, August 22, 2011
கிழக்கு மாகாணத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

அவசர நிலைமைகளை எதிர்நோக்கக் கூடிய வகையில் இராணுவத்தினருக்கு விசேட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

திருகோணமலையில் விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திடீர் வீதிச் சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.

கிறிஸ் பேய் சர்ச்சை காரணமாக கிழக்கில் ஏற்பட்ட அவசர நிலைமைகளை கருத்திற் கொண்டு இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கிண்ணியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புதிய இராணுவ அலகுகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment