Wednesday, August 24, 2011

மர்ம மனிதர்கள் கிaஸ் மனிதர்கள் என்பவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனில் ஆதாரத்துடன் நிரூபியுங்கள்-தினேஷ் குணவர்தன!

Wednesday, August 24, 2011
மர்ம மனிதர்கள் கிaஸ் மனிதர்கள் என்பவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனில் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடவேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக ஆளுங் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பியான எஸ். ஸ்ரீதரன் நேற்றுச் சபையில் முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கையிலேய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மர்ம மனிதன் தொடர்பாக சம்பவங்கள் ஒவ்வொன்று தொடர்பிலும் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் அதீத அக்கறையுடன் செயற்பட்டு வரும் இவ்வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மர்ம மனிதன் சம்பவங்களைக் காரணங்காட்டி அரசாங்கத்தின் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் அவதூறுகளையும் குற்றச்சாட்டுக்களையும் சுமத்துவதை அனுமதிக்க முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், மர்ம மனிதன் தொடர்பான குற்றச்சாட்டுக்களை சபையில் கூறும்போது அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். ஆதாரமின்றி தன்னிச்சையாகக் குற்றச்சாட்டுக்களை சபையில் முன்வைக்க முடியாது.

மீண்டும் இனங்களுக்கிடையில் பேதங்களை ஏற்படுத்தி நாட்டைக் கூறுபோட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முயல்கிறது. அதற்காகவே இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment