Wednesday, August 24, 2011
ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை பாதக நிலைமையை ஏற்படுத்தக் கூடியது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆயுதங்கள் இன்றி குற்றவாளிகளை கைது செய்யச் செல்லும் போது பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றவாளிகளை கைது செய்யச் செல்லும் போது மற்றும் ஏனைய பணிகளுக்காகச் செல்லும் போது ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது என முன்னாள் காவல்துறை மா அதிபர் பதவி வகித்த காலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவின் காரணமாக கலகக்காரர்கள் மற்றும் குற்றவாளிகள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வரகாபொல பிரதேசத்தில் நிராயுதபாணிகளாக சென்ற காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது கொள்ளைக் கூட்டத்தினர் நடத்திய தாக்குதல்களில் ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர்.
அண்மையில் புத்தளம் பிரதேசத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி கொல்லப்பட்டார்.
இவ்வாறான ஓர் சூழ்நிலையில் கலகக்காரர்கள் மற்றும் குற்றவாளிகளை கைது செய்யும் போது ஆயுதமின்றி செல்வலு ஆபத்தான நிலையை உருவாக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
கடமைகளுக்காக செல்லும் போது காவல்துறையினர் ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடிய வகையில் மீண்டும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment