Sunday, August 28, 2011

அனலைதீவில் சடலம் மீட்பு!

Sunday, August 28, 2011
யாழ்ப்பாணம் அனலைத்தீவு கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் மீட்கப்பட்ட இந்த சடலம், சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்கது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொழிலுக்கு சென்ற மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் குறித்து காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையிலேயே அது மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம், தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, ஊர்காவற்துறை நீதவான், காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment