Sunday, August 28, 2011

மாற்று காணொளி கன்பராவில்!

Sunday, August 28, 2011
செனல் 4 காணொளிக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட காணொளி, அவுஸ்திரேலியாவின் கன்பரா நகரத்தில், சில தினங்களுக்கு முன்னர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் போது அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பிரநிதிகள் சிலருக்கும் இந்த காணொலி காண்பிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் போது சனல் 4 காணொளியின் உண்மைத் தன்மை தொடர்பில் இந்த பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்பு பிரிவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சரத் திசாநாயக்க தெரிவித்தார்.

இந்த காணொளி, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இததனிடையே சனல் 4 காணொளி காட்சிப்படுத்தப்பட்ட அமெரிக்கா, இங்கிலாந்து, சுவீடன் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும், பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட காணொளி திரையிடப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன் பொருட்டு குறித்த நாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயங்கள் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment