Sunday, August 28, 2011

பிறந்ததின நிகழ்வில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி!

Sunday, August 28, 2011
பெந்தோட்டை, தேத்துவ பகுதியில் பிறந்தநாள் நிகழ்வொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிறந்ததின நிகழ்வின் போது இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் உக்கிரமடைந்த நிலையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்வதற்கான விசாரணைகணை முன்னெடுத்து வருவதாகவும் பெந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment