Wednesday, August 24, 2011

வடமராட்சி வெள்ளை வேன் சம்பவத்துக்கு இராணுவம் மறுப்பு!.

Wednesday, August 24, 2011
வடமராட்சியில் பொதுமக்கள் பிடித்த மர்ம மனிதர்களை வெள்ளை வேனில் வந்த படையினர் மீட்டுச் சென்றதாகக் கூறப்படும் செய்தியில் எவ்வித உன்மையும் இல்லை என்று யாழ் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

இன்று வெளிவந்த தமிழ் நாளிதழ் ஒன்றில் மேலே கூறிப்பிடப்பட்ட தலைப்பிட்டு செய்தி ஒன்று வெளியாகி இருந்தது.

வடமராட்சியில் நேற்று முன்தினம் இரவு நடமாடிய மர்ம மனிதர்களை பொதுமக்கள் துரத்திப் பிடித்த போது அங்கு வந்த படையினர் அவர்களை மீட்டுச் சென்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

படையினர் வெள்ளை வேன் ஒன்றில் வந்ததாகவூம் அதன் இலக்கத்தகடு துணியால் மூடப்பட்டிருந்ததாகவூம் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து கேட்ட போதே அதனை முற்றாக மறுப்பதாகவும் அந்தத் தகவலில் எவ்வித உன்மையும் இல்லை என்றும் அவ்வாறான வெள்ளை வேன் சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என்றும் யாழ் கட்டளைத் தளபதி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment