புத்தளம் நகரில் அண்மையில் இடம்பெற்ற அசாதாரண சம்பவத்தில் கொல்லப்பட்ட காவற்துறை உறுப்பினர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் அமைதி கடைபிடிக்கப்படுகிறது!


Wednesday, August 24, 2011
புத்தளம் நகரசபை, புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் உலமா சபை,மற்றும் வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து விடுத்த வேண்டுகோளுக்கிணங்க படுகொலை செய்யப்பட பொலிஸ் கான்ஸ்டபில் நவரத்ன பண்டார அவர்களின் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் இன்றைய தினத்தில் இந்த பாதகச் செயலுக்கு எமது ஊர் மக்களின் அனுதாபத்தை தெரிவிக்கும் முகமாகவும் சகோதர சமூகத்தின் மன உணர்வுகளை மதித்தும் புத்தளம் வாழ் மக்கள் அனைவரும் தங்களது வியாபார ஸ்தலங்களை மூடி வெள்ளைக்கொடிகளை பறக்கவிட்டும் தமது அனுதாபத்தை தெரிவிக்கும் பதாதைகளை தொங்கவிட்டும் உள்ளனர்.
இச்செயற்பாடுகள் மூலம் எமது பிரதேசத்தில் இதுவரை பேணப்பட்டு வந்த இன நல்லுறவு சிதைந்துவிடாமலும் அப்பாவி உயிர்கள் ஈனத்தனமாக பலியிடப்படாமலும் இருக்கவேண்டுமென வேண்டப்படுகின்றது.இவ்வாறான சந்தர்பங்களின் போது புத்தளம் பெரியபள்ளியின் தலைமையிலான சமூக கட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவ வேண்டுமென எதிர்பார்கப்படுகிறது.
No comments:
Post a Comment