Friday, August 26, 2011

புதுடில்கியில் இடம்பெற்ற தமிழ் கட்சி மாநாடு கலந்துரையாடல் தீர்மானம் இன்றி நிறைவடைந்துள்ளது!

Friday, August 26, 2011
இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக வடக்கு கிழக்கின் தமிழ் கட்சிகள் மத்தியில் இனக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையில், புதுடில்கியில் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்வின்றி நிறைவடைந்துள்ளது.

இந்த கலந்துரையாடல் கடந்த 23ம் மற்றம் 24ம் திகதிகளில் புதுடில்கியில் இடம்பெற்றது.

இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன நாச்சி அப்பனின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இது தொடர்பில் தமது கட்சியின் சார்பில் கலந்துரையாடலில் பங்கேற்றவர்களின் தகவல்களை எமது செய்திசேவையுடன் பகிர்ந்துக் கொள்கிறார், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்.

ஈ.என்.டீ.எல்.எப் எனப்படும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் பரந்தன்ராஜனின் தலைமையில் முதல்நாள் அமர்வு இடம்பெற்ற போது, அதில் இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தமிழ் கட்சிகள் இணக்கப்பாடு ஒன்றை எட்டின.

அது கலந்துரையாடலில் பங்கேற்ற இந்திய நாடாளுமன்றத்தின் சுமார் 25 உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் கலந்துரையாடல் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான அமர்வாக அமைந்திருந்தது.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு 13ம் சரத்துக்கு அப்பாலான தீர்வு, இந்திய பிரதமரின் உறுதி மொழி, இலங்கை அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை போன்றவற்றின் அடிப்படையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி, இரு தேச கொள்கையை கொண்ட தீர்வை முன்வைத்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணி, இந்திய மாநில முறையிலான தீர்வை மீண்டும் வலியுறுத்தியது.

இதன் அடிப்படையில், குறித்த கலந்துரையாடலில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான கருத்தொற்றுமை எவையும் ஏற்படவில்லை.

No comments:

Post a Comment