Friday, August 26, 2011

3ஆம் இணைப்பு:- பேரறிவாளன், முருகன், சாந்தன் செப்டம்பர் 9ம் திகதி தூக்கிலிடப்படுவர்!

Friday, August 26, 2011
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் செப்டம்பர் 9ம் தேதி தூக்கிலிடப்படவுள்ளதாக வேலூர் சிறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த தகவல் மூன்று பேருக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் கருணை மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை குடியரசுத் தலைவர் சமீபத்தில் நிராகரித்து உத்தரவிட்டார்.

இதனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். மூவரையும் தூக்கிலிடக் கூடாது என்று கோரி பல்வேறு நாடுகளிலும், தமிழகத்திலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஒரு இயக்கம் போல இதை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இவர்கள் மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள தகவலை முறைப்படி உள்துறை அமைச்சகம், வேலூர் சிறைக்கு அனுப்பி வைத்தது.

இதனால் மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. விதிமுறைப்படி, தூக்குத் தண்டனையை நிறைவேற்றலாம் என்ற உத்தரவு வந்த 7 நாட்களுக்குள் தண்டனைக்குரியவரை தூக்கிலிட வேண்டும். மூன்று தமிழர் விவகாரத்தில், நேற்று கடிதம் வந்ததாக கூறப்படுகிறது. எனவே இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குள் அதாவது செப்டம்பர் 2ம் தேதிக்குள் அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் 9ம் தேதி மூன்று பேரும் தூக்கிலிடப்பட உள்ளதாக வேலூர் சிறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முதல் கட்டமாக பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரிடமும் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவலை முறைப்படி சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் இன்று அவர்களை தூக்கிலிடும் தேதியை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுளள்ள மூவரில் பேரறிவாளன் தமிழகத்தைச் சேர்ந்தவர். மற்ற இருவரும் இலங்கை சேர்ந்தவர்கள்
.

No comments:

Post a Comment