Friday, August 26, 2011
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனு இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேலினால் நிராகரிக்கப்பட்டுள்ளமையை மத்திய உள்துறை அமைச்சு தமிழக அரசுக்கு அறிவித்துள்ளது.
இந்த செய்தி கிடைத்தவுடன் சிறை அதிகாரிகள் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரும் சிறைவைக்கப்பட்டுள்ள வேலூர் மத்திய சிறைச்சாலையில் கொமாண்டோ படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
வழமையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு அறிவிப்பு வெளியான ஏழு நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் பிராகாரம் அடுத்த மாதம் ஏழாம் திகதிக்குள் இவர்கள் மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் தி ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.
இம் மாதம் இரண்டாம் வாரத்தில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் கருணை மனு இந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதாக செய்தி வெளியானதையடுத்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியப் பிரஜையான பேரறிவாளன் மற்றும் இலங்கைப் பிரஜைகளான முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் ஏற்கனவே 20 வருடங்கள் சிறையில் கழித்துள்ளமையினால் மரண தண்டனையை நிறுத்தக் கோரியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த மரண தண்டனை தமிழக அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்த வேண்டும் என தழிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மனித உரிமைகள் ஆர்வலர்களால் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் தமிழ் நாட்டில் மனிதச் சங்கிலி பேராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் ஆகியோர் இன்றையதினம் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment