Friday, August 26, 2011
ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத்தண்டனையை உறுதி செய்யும் ஜனாதிபதி அலுவலக உத்தரவு (கருணை மனு ரத்து ) நகல் இன்று வேலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மதிமுக பொது செயலாளர் (புலி)வைகோ இன்று வேலூர் சிறையில் மூவரையும் சந்தித்தார். அப்போது தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்க எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் தெரிவிக்கின்றன .
ராஜீவ் கொலையாளிகள் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல்: ரெயில் சேவை பாதிப்பு!
ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று திடீர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டை ரெயில் நிலைய தண்டவாளத்தில் உட்கார்ந்து 100 மாணவர்கள் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். அவர்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனாலும் 1/2 மணி நேரம் கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதேபோல கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் நிலையத்தில் மற்றொரு பிரிவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளச்சேரி ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியிலும் ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

No comments:
Post a Comment