Friday, August 26, 2011
யாழ். நாவந்துறை இராணுவ முகாமுக்கு அருகில் அமைதியின்மையை தோற்றுவித்ததாக சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நூறு பேரும் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இவர்கள் கடந்த 23 ஆம் திகதி யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இன்று 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் சந்தேகநபர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு யாழ் மாவட்ட நீதபதியும், மேலதிக நீதவானுமாகிய ஏ.பிரேமசங்கர் உத்தரவிட்டார்.
இன்றைய விசாரணைகளின் போது வைத்திய பரிசோதனை அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சந்தேகத்திற்கிடமானவர்களை தேடிச் சென்ற கிராம மக்கள் குழுவொன்று யாழ் நாவாந்துறை இராணுவ முகாம் மீது கடந்த திங்கட்கிழமை தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நூறு பேர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவத்தை கட்டுப்படுத்த முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் இதன்போது காயமடைந்ததுடன், இரண்டு பொலிஸ் ஜீப்களும் சேதமடைந்தன.

No comments:
Post a Comment