Saturday, August 27, 2011
ஹப்புதளை கொட்டலாகலை தோட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் இன்று பண்டாரவலை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தோட்டத்திற்கு வர்த்தக நடவடிக்கைகளுக்காக சென்ற மொணராகலை பிரதேசத்தை சேர்ந்த இருவரை சந்தேகத்திற்கிடமான நபர்கள் என கருதி தாக்குதல் நடத்தியமையினால் அவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாவாந்துறையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை!
யாழ். நாவாந்துறை பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைது செய்யப்பட்ட 95 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை மீண்டும் ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் காரணமாக யாழ். நாவாந்துறை பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment